Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 19 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவரை அதிலிருந்து மீட்பதற்காக தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) அவரிடம் இருந்து சிறிய பொதி ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்று அருகில் இருந்தவர்கள் கேட்டபோது ஹெரோயின் என்று கூறியதுடன், அதைக் காண்பித்தும் உள்ளார்.
இது தொடர்பாகப் பொலிஸாருக்கு இரகசியமாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவரிடம் இருந்து சிறிய 3 பொதிகளில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago