2025 ஜூலை 30, புதன்கிழமை

போதைப்பொருளை தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதைப்பொருள் தடுப்பு விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோருகின்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை உறுப்பினர் ச.சுகிர்தன் முன்வைத்தார். சபைக்கு பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .