Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி பங்கீட்டு முறையில், அத்தியவசியப் பொருள்களை வழங்க வேண்டுமென்று, வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடர்ந்துரைத்த அத்திணைக்களம், சங்கங்களின் கிளை நிலையங்களில் இருப்பில் உள்ள பொருள்களை நுகர்வோருக்குப் பங்கீட்டு முறையில் வழங்கவும், சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றது.
அரிசி, சீனி, மா, பருப்பு, பால் மா போன்ற பொருள்கள் யாவும் நுகர்வோருக்கு உரிய முறையில் கட்டுப்பாடின்றி பங்கீட்டு முறையில் வழங்கப்பட வேண்டுமென்ற திணைக்களம், தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவை கருதி பொருள்களின் கையிருப்புகளையும் சங்கங்கள் உரிய முறையில் பேண வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கூட்டுறவுக் கிளை நிலையங்களில், தற்போதைய நிலையில் வியாபார நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், திணைக்களம் கூறியது.
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago