2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பனிக்கன்குளம் பாடசாலை வீதி எப்போது புனரமைக்கப்படும்

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்காக புனரமைக்கப்படாதுள்ளதால் அவ்வீதி வழியே பயணிக்கம் பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

1960ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இப்பகுதியில் மக்கள் குடியேறிய இந்த பகுதியில் இதுவரை காலமும் இந்த வீதி நிரந்தர வீதியாக புனரமைக்கப்படாது கிரவல் பரவியே செப்பனிடப்படுவதாகவும் அதுவும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எந்த புனரமைப்பு பணியுமின்றி காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இப்பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதி திருத்தப்படாதுள்ளதோடு வீதியிலுள்ள பாலம் ஒன்று உடைந்து காணப்படுகின்றது. மேலும், வீதி புனரமைக்கப்படாமையினால் உரிய வடிகால் அமைப்புக்களின்றி பல இடங்களில் வீதிக்கு குறுக்காக நீர் வழிந்தோடுவதால் அவ்வீதிவழியே பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த வீதியை புணரமைத்து தருமாறு சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்டபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இவ்வீதியை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .