Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தேசிய இளைஞர் சேவை மன்றத்துக்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் மாவட்டக் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதுடன், 110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம் ஒன்றை அமைத்து தருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி வினோதினி சிறீமேனன் தெரிவித்தார்.
மன்றத்தின் ஒரு வருடகால பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, மேலும் அவர் கூறுகையில்,
“தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக இந்த மாதத்துடன் நிறைவடையும் ஒரு ஆண்டு காலத்தில் 110 பாரிய செயற்றிட்டங்களை நாங்கள் நடாத்தியிருக்கின்றோம். இளைஞர்கள் பரிமாற்றம், தேசிய மட்டத்திலான விளையாட்டு போட்டிகளையும் நடத்துகின்றோம்.
“குறிப்பாக யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி 4 தடவைகள் தேசிய மட்டத்தில் வெற்றியடைந்துள்ளது. இது சாதாரணமான விடயமல்ல. அதேபோல் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட ஆண்கள் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளனர்.
“மேலும், கயிறு இழுத்தல் போட்டியிலும் யாழ்.மாவட்ட பெண்கள் அணி 5 தடவைகள் அபாரமான வெற்றியை பெற்றிருக்கின்றது. இவ்வாறு பல சாதனைகளை யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம் சாதித்து காட்டியிருக்கும் நிலையில் யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்ட பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
“அதேபோல், கல்லுண்டாய் பகுதியில் 12 ஏக்கர் காணியில் 50 மில்லியன் செலவில், மிக நீண்டகாலத்தின் பின்னர் மன்றத்தின் யாழ்.மாவட்ட காரியாலயம் அமைக்கப்படுகின்றது. அதேபோல் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது, 110 மில்லியன் ரூபாய் செலவில் இளைஞர்களுக்கான தொழில் பயிற்றி மையம் ஒன்றை உருவாக்க நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
“அது நிறைவேற்றப்பட்டால் பாரிய கட்டிடம் ஒன்றை அமைத்து திறம்பட செயலாற்றுவோம். மேலும் மிக நீண்டகாலமாக தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு நிரந்தர கட்டடம் ஒன்று இருக்கவில்லை. நான் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடமாற்றம் பெற்றதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாவற்குழி, ஊர்காவற்றுறை, கல்லுண்டாய் ஆகிய இடங்களை மாவட்ட செயலர் அடையாளப்படுத்தினார்.
“நாங்கள் அனைவரும் கூடி கல்லுண்டாய் பகுதியை தெரிவு செய்தோம். பல எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அதனை நாங்கள் சாதித்து காட்டியிருக்கின்றோம். தொடர்ந்தும் எமது கூட்டு முயற்சியின் ஊடாக சாதிப்போம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025