Freelancer / 2022 மார்ச் 04 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்ப்பாணம் - பொன்னாலை, பருத்தித்துறை வீதியோரத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் இவரின் சடலம் காயங்களுடன் காணப்படுகின்றது.
சடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மரணம் விபத்தா அல்லது சதி வேலையா என இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .