Niroshini / 2021 ஜூலை 18 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என்.ராஜ்
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுடன் பணியாற்றிய 70 பேரையும் காணவில்லை என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இந்த 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில், 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை, வெள்ளிக்கிழமை (16) உறிதிபடுத்தப்பட்டது.
அதனையடுத்து, தொற்றாளர்களை அடையாளம் கண்டு, கோவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது, அதில் 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில், தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களுடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்தச் சென்ற போது, அவர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
அவ்வாறு சுயதனிமைப்படுத்துவதற்காக 70 பேரின் விவரங்களுடன் சுகாதாரத் துறையினர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
33 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
4 hours ago