2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பல்வேறு கோரிக்கைகளுடன் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 23 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக் வட மாகாணத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல அமைப்புகள் கலந்துகொண்டு வலு சேர்த்தன.

கவனயீர்ப்பில் கலந்துகொண்டோர், “நீதி எங்கே!, எமது நிலம் எமக்கு வேண்டும்”, "விமான நிலையம் என்ற பெயரில் நம் நிலங்களை அபகரித்து அங்கு இராணுவம் விவசாயம் செய்வது சரியா", “மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து” மற்றும் "சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்து" போன்ற பல்வேறு வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி ஊடாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X