2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பஸ் நிலையத்தில் நின்றவர்களை பந்தாடிய லொறி; பெண் பலி

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதுப் பெண் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம் பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த  தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளனர்.

இதன்போது, வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி​ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

இதில் சிவசுப்பிரமணியம் சிந்துயா (வயது 33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி அதிக வேகமாக வந்த நிலையில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக கனகராஜன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X