2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், சிறுவன் ஒருவன் உட்பட இருவர், நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட இளைஞனர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 8ஆம் திகதி பாடசாலையின் அலுவலகத்தின் கூரை பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், அங்கிருந்து  82 ஆயிரத்து 610 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடி சென்றிருந்தனர்.

அதில் கணிணி தொகுதி, அதனுடன் இணைந்த றேடியோ, மைக், அம், யூபிஸ்., கெற்போன், எலக்றிக்கேற்றில், ஸ்ரெப்ளர்மிசன், ஆய்வுகூட உபகரணங்கள் உட்பட களஞ்சிய அறையில் இருந்த 53 ரின் மீன்கள் என்பன திருடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் ஊகாவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த சிறுவனையும் இளைஞனையும் கைதுசெய்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X