Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை நியாயமாகவும் தர்மத்தின் அடிப்படையிலும் கையாண்டிருந்தால், நாடு இன்று அமைதியற்ற நிலைமைக்குச் சென்றிருக்காதென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் இன்று (15) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைத் தீவிலும் இந்துமகா சமுத்திர பிராந்தியத்திலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை நியாயமாகவும் தர்மத்தின் அடிப்படையிலும் கையாண்டிருந்தால் நாடு இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்கதெனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
7 hours ago
8 hours ago