Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், க. அகரன்
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக, சஞ்சீவ தர்ம ரட்ண, இன்று (23) காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில், வடக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்ம ரட்ண நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வன்னி மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்ன, இன்றைய தினம் (23) தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிவந்த தம்மிக்க பிரியந்த களுத்துறை பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், கண்டியில் மோப்பநாய்கள் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்து பின்னர் தகவல் தொடர்பாடல் ஊடக்கதுறைக்கு பொறுப்பாகப் பணியாற்றி வந்த லால் செனவிரத்ன, புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago