Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
“பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2002ஆம் ஆண்டில், அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தாரென்றார்.
அத்தோடு, இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் வினவினார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago