Freelancer / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மயூரப்பிரியன்
பூநகரி - மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில் , அதனை மீளுருவாக்கம் செய்வதற்கு தற்போது, இலங்கை தொல்லியல் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதனை அடுத்து தொல்லியல் ஆய்வு உத்தியோகஸ்த்தர் வி.மணிமாறனின் நெறிப்படுத்தலில் , தொல்லியல் அதிகாரிகளின் மேற்பார்வையிலும் மீளுருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்கள் , மாணவர்களும் முக்கிய பங்கேடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025