2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிப்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச வேலைகளுக்குள் உள்ளீர்க்கும் நோக்குடன் அவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களால் சேகரிக்கப்படுகின்றன.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு அரச வேலை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைவாகவே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜே.பிரமிளஸ் கொஸ்தா கடந்த 08 ஆம் திகதி கடிதமொன்றை யாழ்.மாவட்ட செயலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதன் பிரகாரம் மாவட்ட செயலரால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட திகதி என்பவற்றை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு  கோரப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .