Editorial / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
பூசகர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) வீதியோரமாக நின்றிருந்த பூசகரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் என்பன கொள்ளையிடப்பட்டதாக, பருத்தித்துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நேற்று (07) சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
மேலும், சிலர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago