Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், டி.விஜிதா
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.
சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி மூலம் அடையாளம் காணப்பட்டன.
அதனையடுத்து நேற்றிரவு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நால்வரும் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடரி, கைக் கிளிப்புகள் மற்றும் பல்சர் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் சம்பவ இடம்பெற்ற வீட்டில் முன்னர் வசித்தார். அவர் தற்போது அங்கு இல்லை. அவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என தெரிவித்தனர்.
12 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
34 minute ago