Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
பொதுமக்கள் பொதுஇடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் மீதான விசாரணை, இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடுனரான பொலிஸார் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் பிரபாகரன் குமாரரட்ணம், ஹரிப்பிரியா ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார ஆகியோர் முன்னிலையாகினர்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று, தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.
போரில் உயிரிழந்த வீரர்கள் உறவுகளை நினைவேந்துவது மரபு என, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago