Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ராஜ்
"யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களைக் கொள்வனவு செய்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அக்கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்ததாவது, “கொரோனா வைரஸ் சமூகத் தொற்றுக் காரணமாக, நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தால், அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் அதிகளவாகக் கொள்வனவு செய்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
“இந்த நடவடிக்கை தேவையற்றதொன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள், அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி, கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன.
“ஆகையால், அநாவசியமாகப் பொருள்களைக் கொள்வனவு செய்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.
“அது மட்டுமன்றி, ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர். எனவே, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்”எனவும் கேட்டுக்கொண்டார்.
19 minute ago
27 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
43 minute ago
49 minute ago