2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை: ‘கொரோனாவை விடவும் ஆபதானது’

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன், டி.விஜித்தா

 

பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை, பயங்கரவாதம் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவற்றை விட மிகவும் ஆபத்தானதென, யாழ்ப்பாணம் மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரில், இன்று (12), பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பித்து வைத்தப் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கையைப் பொறுத்த வரையில், பயங்கரவாதம், கொரோனா ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டோமெனவும் ஆனால் இந்தப் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

அது மிகவும் கடினமான விடயமெனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இது தொடர்பில் பொதுமக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, முதலில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை நிறுத்த வேண்டுமெனவும், அதனை நிறுத்தாதப் பட்சத்தில், எதிர்காலச் சந்ததியினர் பாதிக்கப்படுவரெனவும், அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X