Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜூலை 12 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
சுழிபுரத்தில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில், நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகலொன்றை அடுத்த, அப்பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார், வீடொன்றை சுற்றிவளைத்தனர். இதன்போது, குறித்த வீட்டில் இருந்த பெண்ணுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் அவ்விடத்துக்கு வந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண், இந்த இளைஞன் தான் தங்களது வியாபாரம் தொடர்பான தகவலை பொலிஸாருக்கு வழங்கியதாக தெரிவித்து, பொலிஸாருக்கு முன்னாலேயே, அந்த இளைஞனை கொட்டனால் தாக்கினார். இதில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அந்தப் பெண்ணை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது, அந்தப் பெண்ணின் உறவினரான அயல்வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்.இதையடுத்து, அந்த ஆணும், இளைஞனை தாக்கிய பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து 40 லீற்றர்கள் கோடாவும் ஒரு லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர், இரண்டு வருடங்களுக்கு முன்னர், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
57 minute ago
1 hours ago