Janu / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதான ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது 8 கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணமும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டது.
குறித்த நபரை விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிதர்ஷன் வினோத்

14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago