Niroshini / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல எனத் தெரிவித்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், அது ஒலிம்பிக் வர்ணம் என்று தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாகவும் கூறினார்.
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில், குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தைப் புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக, வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இந்நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதாகவும் கூறினார்.
அதற்கு, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர் எனவும், அங்கஜன் தெரிவித்தார்.
எனவே, இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளுமாறும் எனவும், அவர் கூறினார்.
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago