Niroshini / 2021 ஜூன் 13 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் - குளப்பிட்டி சந்திக்கு அருகில், மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 மீன் வியாபாரிகள், இன்று (13) காலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணயக் கட்டுப்பாடு அமுலில், நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுதிரட்டி, மீன் வியாபாரம் செய்தக் குற்றச்சாட்டில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்களையும் வியாபார பொருள்களையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையால், ஏற்கெனவே மக்களை திரட்டி இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை செய்ய வேண்டாமென அறிவுறுத்தப்பட்ட விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், தொடர்ச்சியாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட குறித்த 6 வியாபாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago