Mayu / 2026 மே 05 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நேற்று (04.05.2026) நள்ளிரவு இடம்பெற்ற மிகத் துயரமான வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். இதன்போது, வீதியோரம் இருந்த வீட்டு மதிலுடன் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவதாசன் துசிந்தன் (22) – கரவெட்டி வடக்கு.
ஏழுமலை துசாந்தன் (24) என்ற இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வேகக் கட்டுப்பாடே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், இளம் உயிர்களின் இந்தத் திடீர் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago