2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம்

Princiya Dixci   / 2022 மார்ச் 20 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரி, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

நகர் பகுதியில் சிவன் கோவிலுக்கு முன்பாக இவ்வளவு காலமும் இயங்கிவந்த மதுபானசாலை புதிய இடம் ஒன்றுக்கு மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, புதிய அச்சூழலில்  இரு கோவில்கள், தபாலகம், பாடசாலை, மற்றும் மக்கள் குடியேற்றங்கள் உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குவதை தடை செய்யுமாறு, அப்பகுதியில் உள்ள வைரவர் மற்றும் முருகன் கோவில்களின்  பரிபாலன சபையினரே, மேற்படி மகஜரை கையளித்துள்ளனர்.

முன்னதாக, பருத்தித்துறை நகர் பகுதியில் சிவன் கோவிலுக்கு முன்பாக குறித்த மதுபான சாலை தொடர்ந்தும் இயங்குவதற்கு பருத்தித்துறை நகரசபை நடப்பாண்டுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .