Freelancer / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இன்றைய கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமும், அவரது குடும்பத்தினரும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரும் ஆவணத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு கிழக்கு மற்றும் தெற்கிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (K)
39 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
19 Mar 2026