Freelancer / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் இந்து மயானம் ஒன்றின் எரிமேடையில் இருந்த இரும்பு தூண்களை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றமையால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்காக இரும்பு தூண்கள் நான்கு நடப்பட்டு இருந்தன. அவற்றினை இரும்பு திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
அதனால் , சடலங்களை எரியூட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடியுள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். R
7 minute ago
16 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
25 minute ago
35 minute ago