Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மயிலிட்டி இறங்குதுறையை அண்டிய பகுதியில், பெரும் நிதிச் செலவில் புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (15) திறந்துவைக்கவுள்ளார் என்றுத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இன்றைய திறப்பு விழாவின்போது, வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ரணிலிடம் இடித்துரைக்கவுள்ளதாகவும் கூறினார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம், துறைமுகத்துக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் உரையாற்றிய தான், மயிலிட்டித் துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் அதேவேளை, இங்கிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள், மீண்டும் இங்கு குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் அதற்கு, அரசாங்கம் வழிவகுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக, கடந்த ஒரு வருடகாலமாக அரசாங்கம் கரிசனை கொண்டிருக்கவில்லையெனத் தெரிவித்த மாவை எம்.பி, அம்மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குற்றஞ்சாட்டினார்.
அண்மையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, அந்தப் பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் பேசியபோது, மீள்குடியேற்றம் தொடர்பில் படைத் தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் உறுதியளித்தாதாகவும், மாவை எம்.பி கூறினார்.
தற்போது, மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (15) துறைமுகம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆனால் மக்களுடைய மீள்குடியமர்வு தொடர்பில் தொடர்ந்தும் ரணில் அரசாங்கம் மௌனமாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
31 minute ago
44 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
23 Aug 2025