2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மறவன்புலவு சச்சிதானந்தனிடம் விசாரணை

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் தான் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் கொழும்புக்கு வர முடியாது எனவும் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் யாழ். 4ஆம்; குறுக்கு தெருவில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்துக்கு நேற்று (11) மறவன்புலவு சச்சிதானந்தன் அழைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட பின்னர் தன்னை வீடு செல்ல அனுமதித்ததாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X