Princiya Dixci / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன்
இரு மாடுகளை திருடி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று (17) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுழிபுரத்தைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டு, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 40 கிலோகிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .