Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 19 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஆசிரியர், கடும் நிபந்தனைகளுடன் நேற்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர், பெண்கள் பாதுகாப்புப் பிரிக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் மறுநாள் (25.12.21) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஜனவரி மாதம் 04ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து குறித்த வழக்கு, ஜனவரி 04 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த ஆசிரியர், நேற்று (18) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் 25,000 ரூபாய் காசுப் பிணையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் ஆசிரியர் விடுவிக்கப்பட்டார்.
அத்தோடு, வழக்கு விசாரணைகள், ஏப்ரல் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025