2025 மே 07, புதன்கிழமை

மாவட்ட அலுவலகத்தை நாமல் திறந்துவைத்தார்

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் இன்று (08) திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதியின் கல்லுண்டாய் பகுதியில் இந்த அலுவலகக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு   மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இந்த அலுவலகத்தைதட திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகே, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X