Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில், கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர், மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிருசுவில் - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் கலைச்செல்வன் (வயது 27) என்பவரே, இவ்வாறு காயமடைந்தவர் ஆவார்.
சாவகச்சேரி நகர் பகுதியில், கடை தொகுதி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (01), குறித்த இளைஞன் 4ஆம் மாடியின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.
இதில், தலையில் காயமடைந்த இளைஞன், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago