2025 ஜூலை 19, சனிக்கிழமை

மீன்பிடித்த 15 வெளிமாவட்ட மீனவர்கள் சிக்கினர்

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை கடற்பரப்பில், நேற்று  (28), சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை, அப்குதி மீனவர்கள் மடக்கிப் பிடித்து, நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத 2 1/4 இஞ்சி கண் சுருக்கு வலையைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த  ஐந்து படகுகளை சுற்றிளைத்த அப்பகுதி மீனவர்கள்,  மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும், 5 படகு மற்றும் சுருக்குவலைகளுடன் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் வடமராட்சி மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X