2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘முறைப்பாடுகளோ, ஆதாரங்களோ இல்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஏற்கெனவே இடம்பெற்றதொன்று, இது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது என்பதற்கான முறைப்பாடுகளோ அல்லது அதற்கான ஆதாரங்களோ இல்லையென,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்தார்.

மேலும், அவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக உறுதிப்படுத்தினால், அதற்கான தீர்வு நடவடிக்கைக்கு மாணவர் ஒன்றியம் பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழ மாணவிகள் மீது இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தௌவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால், திங்கட்கிழமை (01) நடத்தப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு குறித்து தலைவர் கிருஷ்ணமேனனிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊடகவியாலாளர் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் அதில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்படவுள்ளதாவும் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்ற ரீதியில் தனக்கு அறிவிக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .