2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு; கூட்டத்தில் குழப்பம்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் குழப்ப நிலை இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தை ஒருசிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அரசியல் கலப்படம் வேண்டாம் என அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன், இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அத்துடன், கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருசிலர் முள்ளிவாய்க்காலில் 13ஐ கொண்டுவந்து கலக்கவேண்டாம் என குழப்பத்தை ஏற்பபடுத்தியுள்ளார்கள்.

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலுக்கு, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அதற்கமைய, முல்லைத்தீவு வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் உள்ளிட்டவர்கள் நேற்று (17)  மாலை கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேன்திரனினால், 13ஆம் திருத்தச்சட்டத்தை தீர்வாக  ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நிராகரிக்கின்ற சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுக்கவேண்டும்.

அதற்கான ஆலோசனை கூட்டமாகத்தான் இதனை அறிவித்துள்ளோம் என்றும் இனத்தின் இழப்புக்களையும் தியாகங்களையும் அடகுவைத்துவிட்டு செல்லுகின்றபோது அதனை பார்த்துக்கொண்டிருப்பதும் தவறு அடகு வைப்பதும் தவறும்.

நினைவேந்தல் என்பது மக்கள் என்ன நோக்கத்திற்காக உயிர்கொடுத்தார்களோ அவர்களின் நோக்கம் அடையப்படுவதை அல்லது அந்த நோக்கம் குழிதோண்டி புதைப்பதை தடுக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் இறுதியில்  ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வெளியேறியுள்ளார்கள்.

ஏற்கெனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இருக்கின்ற நிலையில், அதில் உள்ள முக்கியமானவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .