2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மோட்டார் குண்டுகள் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றடியில் இருந்து மோட்டார் குண்டுகள் நேற்று (18) மீட்கப்பட்டு உள்ளன.

கடந்த 28 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி இராணுவத்தினரால் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

அவ்வாறு கையளிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. அவை தொடர்பில் அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவற்றை பார்வையிட்டனர்..

பின்னர் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்து அவற்றை மீட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .