Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்ம கழிவுகளை அகற்றப் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட 10ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்வதற்கான சேதன பசளை உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
குறித்த பிரதேச சபையால் ஏற்கனவே கல்லூண்டாய் தரிசு நிலத்தில் மண் நிரப்பப்பட்டு சேதன பசளை உருவாக்குவதற்கான நிலையம் அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையம் வடமாகாணத்தில் முன்னணி வகித்து வருகின்றது.
இந்நிலையில் இன்று ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைய உள்ள மேலுமொரு திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்கனவே அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் இயந்திர தொகுதிகளும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், சண்டிலிப்பாய் கமநல பெரும்போக உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர், பிரதேச சபையின் செயலாளர், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago