Freelancer / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகநபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார். (R)
39 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
19 Mar 2026