Freelancer / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆதார (மந்திகை) வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் நேற்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்வவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று காலை 5.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
எரிவாயு சிலிண்டரை அன்றைய தினமே மாற்றி இருந்ததாக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago