Freelancer / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்., மருதனார்மடம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய கையெழுத்துப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.பிரகாஸ், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (K)
39 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
19 Mar 2026