2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் கவனயீர்ப்பு

Editorial   / 2022 மார்ச் 07 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும், தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .