Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 மார்ச் 02 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியின் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொக்குவில் கிழக்கு காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விமல சந்திரன் மிதுனராஜ் வயது (26)என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவராத்திரி பூஜைக்கு சென்றுவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் பலாலி வீதி நோக்கி பயணித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
இதன்போது பலாலிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பட்டா வாகனத்துடன் இவர்கள் மோதுண்டதாக கோப்பாய் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு இளைஞர்கள் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பட்டா வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025