2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

யாழில் தொடர்ந்து மீட்கப்படும் பெருந்தொகை கஞ்சா

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா திங்கள்கிழமை (3) காலை  கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை

சோதனையிட்ட  பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.

இதன் போது காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் சான்று பொருட்களையும் ஊர்காவற்துறை பொலிசாரின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

nitharsan vinoth


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X