2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழ்.இளைஞர்களின், 120 நாட்கள் கொண்ட சுற்றுலாப் பயணம்

Janu   / 2025 ஜூன் 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் செவ்வாய்க்கிழமை (17) அன்று மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் இவ்வாறு சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சுற்றுலா பணயமானது 120 நாட்கள் கொண்டதாக அமைந்துள்ளதுடன், குறித்த இளைஞர்கள் 25 மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை இனங்காட்டவுள்ளனர்.

மேலும் தற்போது பொலுத்தீன் பாவனை மூலமாக சுற்றுப்புறச் சூழலானது மாசடைந்து வருகின்றது. அதனை தடுப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

வேன் ஒன்றை வீடாக மாற்றி, அந்த வேனில் வீடு ஒன்றில் உள்ள அத்தியவசியமான தேவைகளை உள்ளடக்கி இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

 பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .