Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி. விஜித்தா, எஸ். நிதர்ஷன்
நேற்று மதியம் ரயிலுடன் மோதி 24 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவமானது யாழ்ப்பாணம் கொக்குவில் ரயில் நிலையத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை பக்கமாக சென்ற ரயிலே மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி ஒருபக்க வீதியில் இருந்து மற்றைய பக்க வீதிக்கு, தண்டவாளத்தினூடாக மாறியபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் வருவதை அவதானித்த தந்தை, மகளைக் காப்பாற்ற முயற்சித்தவேளை அவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் ராஜ்குமார் ஜெயந்தி என்ற யுவதி உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தையான ராஜ்குமார் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
19 Mar 2026