Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற குறித்த கொலைச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூச்சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த CCTV காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
காணொளியில் கொலைச் சந்தேக நபர் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து கொலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago