Niroshini / 2021 ஜூலை 12 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உட்பட்ட 185 பேருக்கு, சனிக்கிழமை (09); பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 173 பேருக்கு தொற்றில்லை என்றும் 12 பேர் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
இந்நிலையில், நேற்று (11), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மீளவும் 12 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் முடிவுகளின் அடிப்படையில் மாணவன் ஒருவரும், மாணவி ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேலும் ஒருவருக்கு மீளவும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago