2025 மே 24, சனிக்கிழமை

யாழ். பெண் கொலை; சந்தேகநபர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூச்சாடியால் அடித்துக் கொலை செய்த பின்னர், பெண் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கொலை நடந்த வீட்டுக்கு அருகில் இருந்த சி.சி.டி.வி கமெரா காட்சிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.  

காணொளியில் சந்தேகநபர் ஓட்டோவில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார், யாழ்ப்பாணம் - முலவை எனும் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை, யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X